Saturday, February 23

ஜம்யத்துல் உலமா சபையின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது : கலகொட அத்தே


அகில இலங்கை ஜமியத்துல் உலமா சபையின் ஹலால் தொடர்பான முடிவை ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை என்று பொதுபலசேனா அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசாரதேரர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அரசாங்கத்தின் முடிவு என்ன என்பதையே நாம் எதிர்பார்க்கின்றோம் என்றும் தேரர் கூறினார்.

இது தொடர்பாக கலகொட அத்தே ஞானசார தேரர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ஜமியத்துல் உலமா சபை என்பது முஸ்லிம் மதம் சார்ந்த தனியார் அமைப்பாகும். எனவே நாட்டில் பிரச்சினையை தோற்றுவித்துள்ள ஹலால் உணவு சான்றிதழ் தொடர்பாக தீர்மானிப்பதற்கு அவ் அமைப்பிற்கு அதிகாரம் கிடையாது.
 
இதேவேளை ஹலால் சான்றிதழ் வழங்குவதற்கு உலமா சபைக்கு யார் அதிகாரம் வழங்கியது. இதுவொரு மத அமைப்பே தவிர அரசாங்கத்தின் அமைப்பல்ல.
எனவே முஸ்லிம்களுக்கு மட்டும் ஹலால் சான்றிதழ் என்ற அமைச்சரவை உபகுழுவின் பரிந்துரையை ஏற்பதாக உலமா சபை தெரிவித்துள்ளது. இவர்கள் யார்?
இம்முடிவை எடுப்பதற்கு. இலங்கையின் ஆட்சியாளர்களா? எனவே அரசாங்கம் இது தொடர்பில் உத்தியோகபூர்வமாக முடிவை அறிவிக்க வேண்டும்.
வெறுமனே மத அமைப்பொன்றின் முடிவை ஏற்றுக்கொள்ள நாம் தயாரில்லை.

அத்தோடு அரசாங்கத்தின் அனுமதியுடன் இயங்கும் உணவுத் தரச்சான்றிதழ் வழங்கும் அமைப்பொன்றே இவ்வாறான சான்றிதழை வழங்க வேண்டும்.
தனிப்பட்ட உலமா சபையின் முடிவுக்கு கட்டுப்பட வேண்டிய அவசியம் எமக்கு கிடையாது என்றார்.

No comments:

Post a Comment