|
|||||||||||||||||||||||||||||
ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் குழுவினருக்கும் கண்டி மல்வத்து பீட
மகாநாயக்க தேரரான திப்பட்டுவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கலபிதான தேரருக்கும்
இடையிலான சந்திப்பொன்று இன்று காலை கண்டியில் இடம்பெற்றுள்ளது.
முஸ்லிம்களுக்கு எதிராக நாட்டில் தற்போது இடம்பெற்றுவரும் இனவாத
செயற்பாடுகள் தொடர்பில் இதன் போது மல்வத்து மகாநாயக்க தேரரின் கவனத்துக்கு
முஸ்லிம் கவுன்சில் தரப்பினரால் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து முஸ்லிம் தரப்பினரிடம் இது தொடர்பில் கலந்துரையாடியுள்ள
மகாநாயக்க தேரர், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகளை கருத்திற்கொண்டு
இரு மதங்களுக்கும் இடையிலான புரிந்துணர்வு மற்றும் நல்லிணக்கம் தொடர்பில்
உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படல் வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இன்று காலை இடம்பெற்ற குறித்த சந்திப்பில் முஸ்லிம் கவுன்சில் தலைவர்
என்.எம். அமீன்,முன்னாள் ஈரானிய தூதுவர் எம்.எம். சுஹைர், ஜாமியா நளீமியா
கலாபீடத்தின் பணிப்பாளர் கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி,ஜனாதிபதி
சட்டத்தரணிகளான சிப்லி அசீஸ், இக்ராம் முஹம்மத்,மெளலவி இப்ராஹீம்,டாக்டர்
நவுபர்,தஹ்லான் ஆகியோர் முஸ்லிம் கவுன்சில் சார்பில் பங்குகொண்டிருந்ததாக
தெரியவருகின்றது.
. |
Saturday, February 23
மகாநாயக்க தேரரை சந்தித்து முஸ்லிம் கவுன்சில் கலந்துரையாடல்
Labels:
இலங்கை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment