காலி, ஹிரும்புரை முஹிதீன் ஜூஆம்ப்
பள்ளிவாசல் மீது வெள்ளிக்கிழமை (22) அதிகாலை 2 மணியளவில் விஷமிகள் சிலர்
கற்களை எறிந்து ஜன்னல் கண்ணாடிகளை சேதப்படுத்தியுள்ளனர்.
வீசப்பட்ட கற்கள் பள்ளியினுள் வீழ்ந்து பல இடங்களில் சிதறிக் காணப்பட்டன.
இந்தச்
சம்பவம் தொடர்பில் பொலிசார் உரிய நடவடிக்கை மேற்கொள்ள தாமதித்ததையடுத்து
நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம்
காலி பிரதேச பிரதம பொலிஸ்மா அதிபர் நீல் தலுவத்தையுடன் தொடர்பு கொண்டு
உடனடியாக புலன் விசாரணை நடாத்துமாறும், பாதுகாப்பை உறுதிபடுத்துமாறும்,
அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும் கேட்டுள்ளார்.
No comments:
Post a Comment