Saturday, February 23

நாட்டில் எந்த பள்ளிவாசல்களும் தாக்கப்படவில்லை: காதர்


abdul-caderநாட்டில் இதுவரை எந்த பள்ளிவாசல்களும் தாக்கப்படவில்லை. ஆனால் இரண்டு ஸியாரங்கள் உடைக்கப்பட்டுள்ளன. அவற்றை உடைத்தது சிங்களவர்களல்ல. முஸ்லிம்கள்தான் என பிரதியமைச்சர் ஏ.ஆர்.எம்.ஏ.காதர் தெரிவித்துள்ளார்.என்று ஊடக செய்திகள் குறிப்பிடுகின்றன .
கம்பளையில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும்  அவர் தெரிவித்ததாக தெரிவிக்கப் படும் தகவலில், பள்ளிவாசல்கள் எங்குமே உடைக்கப்படவில்லை. அவையெல்லாம் பொய்ப் பிரசாரங்களாகும். அவற்றை நம்பவேண்டாம். கொழும்பிலிருந்து கொண்டு கூச்சலிடும் சிலரின் வாய்வீச்சுகளுக்கு மக்கள்ஏமாந்துவிடக்கூடாது.என்றும் அவர் தெரிவித்துள்ளாராம்
சிங்கள மக்கள் நட்பாகப் பழகக்கூடியவர்கள். அவர்களோடு நான் சிறந்த உறவைப் பேணிவருகிறேன். அவர்களோடு இணைந்து பணிபுரிவது இலகுவானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment