கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க
ஆணைக்குழுவின் பரிந்துரைகளை துரித
கதியில் அமுல்படுத்துமாறு இலங்கையிடம் தென் ஆபிரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.
இன்று (25) ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 22ம் அமர்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றிய
தென் ஆபிரிக்க சர்வதேச விவகார பிரதி அமைச்சர்
இப்ராஹிம் இப்ராஹிம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் நல்லிணக்க
முனைப்புக்கள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு
நம்பகமானதும், ஏற்றுக் கொள்ளக் கூடியதுமான வகையில் தீர்வுத் திட்டமொன்றை
முன்வைக்க வேண்டும் எனவும் தென் ஆபிரிக்கா தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment