சனல் 4 ஆவணப்படத்தை ஜெனீவாவில் திரையிட அனுமதிக்க வேண்டாம் - இலங்கை போர்க்கொடி
ஜெனீவா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத் தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில்,
இலங்கைக்கு மேலும் மேலும் நெருக்கடிகளை கொடுக்கும் வகையில் சனல் 4
வெளியிட்டுள்ள புதிய ஆவணப்படத்தை ஜெனீவாவில் திரையிட இலங்கை எதிர்ப்பு
வெளியிட்டுள்ளது.
இது குறித்து ஜெனீவாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ரவிநாத் ஆரியவங்ச ஐநாவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
சனல் 4 வெளியிட்டு இலங்கையை பெரும் சிக்கலில் தள்ளியுள்ள ‘போர் தவிர்ப்பு
வலயம்’ (No Fair Zone) எதிர்வரும் மார்ச் 1ம் திகதி ஜெனீவாவில்
திரையிடப்படவுள்ளது.
மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு இந்த ஆவணப்படம் திரையிடப்படவுள்ளது.
சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமை கண்காணிப்பகம் மற்றும் FIFDH என்பன இணைந்து இந்த ஆவணப்படத்தை திரையிடவுள்ளன.
இந்நிலையில் சனல் 4 தொலைக்காட்சியின் ‘போர் தவிர்ப்பு வலயம்’ (No Fair
Zone) ஆவணத் திரைப்படத்தினை ஐ.நா மனித உரிமைச்சபையில் திரையிட அனுமதிக்க
வேண்டாமென இலங்கை கோரியுள்ளது.
உண்மைக்கு புறம்பான பதிவுகளுடன்
இந்த ஆவணத்திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள, ரவிநாத்
ஆரியவங்ச, போருக்கு பிந்திய இலங்கைத்தீவில் இனங்களுக்கு இடையிலான
ஓற்றுமையினை இது சீர்குலைக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
சனல் 4 ஆவணப்படம் திரையிடப்படுவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடாத்தப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
No comments:
Post a Comment