Tuesday, February 26

ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் தயார்

ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் தயார்


 
இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளதாக விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹம்பாந்தோட்டை, மாத்தளை பிரதேசத்தில் நிர்மானிக்கப்பட்டுள்ள இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமான ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் எதிர்வரும் மார்ச் 18ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது.

இவ்விமான நிலையத்திற்கான நிர்மானப் பணிகள் கடந்த 2009ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் திகதி ஆரம்பமானது.

ஹம்பாந்தோட்டையிலிருந்து 15 கிலோ மீற்றர் தூரத்தில் மத்தளை பிரதேசத்தில் இவ் விமான நிலையம் அமைந்துள்ளது.

No comments:

Post a Comment