நாட்டில் எந்தவொரு முஸ்லிம் பள்ளிவாசலும் இதுவரையில்
தாக்குதலுக்குட்பட்டிருக்கவில்லை அவ்வாறு தாக்கப்பட்டிருப்பதாக ரணில்
விக்கிரமிசிங்கவினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை அரசாங்கம் முற்றாக
நிராகரிக்கின்றது என்று சபை முதல்வரும் அமைச்சருமான நிமால் சிறிபால டி
சில்வா அறிவித்தார்.
பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டிருந்தால் அது தொடர்பான தகவல்களை
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமிசிங்க பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க
வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை அமர்வின் போது நேற்று முன்தினம்
எதிர்க்கட்சித் தலைவரால் முன்வைக்கப்பட்ட முஸ்லிம்கள் தொடர்பான விசேட
கூற்றுக்கு பதிலளித்தபோதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அமைச்சர் நிமால்
மேலும் கூறுகையில்,
ரணில் விக்கிரமிசிங்கவினால் இந்த பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட
விசேட கூற்றின்போது 10 பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள்
நடத்தப்பட்டிருப்பதாகக் கூறினார். அரசாங்கம் என்ற வகையில் எதிர்க்கட்சித்
தலைவரின் அந்தக் கருத்தினை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம்.
நாட்டில் இடம்பெற்ற சில எதிர்ப்பு நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு
இவ்வாறு முஸ்லிம் மதத் தலங்களின் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பதாக
கூறியிருப்பது திரிபுபடுத்தப்பட்டதொன்றாகும். அவ்வாறு முஸ்லிம் மதத்தலங்கள்
தாக்கப்பட்டிருந்தால் அது தொடர்பிலான சகல விபரங்களையும் இந்த
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சமர்ப்பிக்க வேண்டும் என்ற சவாலை
முன்வைக்கின்றேன் என்றார்.
No comments:
Post a Comment