Friday, February 8

தப்தர் ஜீலானி, குறுகல பகுதியை பௌத்தர்களிடம் கையளிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது !!

jailani2-sanson


 (தப்தர்  ஜீலானி அமைந்திருக்கும்) குறுகல பகுதியில் 52 ஏக்கர்  பரப்பளவு  முழுமையாக பௌத்தர்களுக்கு கையளிப்பது என்று புதைபொருள் ஆய்வு திணைக்கள அதிகாரிகள் நேற்று முடிவு செய்துள்ளனர். அதன் படி அங்கிருக்கும் முஸ்லிம்களுக்கு சொந்தமான நிர்மாணங்கள் அனைத்தும் அகற்றப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.   இந்த தீர்மானம் நேற்று எட்டப்பட்டுள்ளது என்று சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது
அந்த செய்தியில் , நேற்று புதைபொருள் ஆய்வு திணைக்கள அதிகாரிகள் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் , சிங்கள ராவைய அமைப்பு , ஜாதிக அமைப்பு மற்றும் இஸ்லாமிய அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
அதேவேளை எதிர்வரும் பெப்ரவரி 11 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 31 திகதிவரை முஸ்லிம்களுக்கு சொந்தமான நிர்மாணங்களை  அகற்றவேண்டாம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ‘இஸ்லாமிய’ நிகழ்சிகள் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது என்று மிகவும் வினயமாக கூட்டத்தில் கலந்துகொண்ட ‘இஸ்லாமிய  மத அமைப்புக்களின்’ பிரதிநிதிகள் கோரியுள்ளதாகவும் ,அது ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் குறித்த திகதியின் பின்னர் அவை அங்கிருந்து அகற்றப் படவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கிறது.

කාලයක් තිස්සේ ඉස්ලාම් ආගමිකයන් සහ බෞද්ධයන් අතර පැවති මතබේදය නිමා කරමින් කූරගල ඓතිහාසික පූජා භූමිය බෞද්ධයන් සඳහා වෙන් කර දීමට පුරා විද්‍යා දෙපාර්තමේන්තුව තීරණය කර තිබේ.ඊයේ පස්වරුවේ පුරා විද්‍යා දෙපාර්තමේන්තුවේ නිලධාරීන්, ආරක්‍ෂක අමාත්‍යාංශ නිලධාරීන්, සිංහල රාවය ජාතික සංවිධානය, බොදු බල සේනා සංවිධානය සහ ඉස්ලාම් ආගමික සංවිධාන නියෝජිතයන් අතර පැවති සාකච්චාවෙන් අනතුරුව මෙම තීරණය ගෙන තිබේ.
ඒ අනුව අක්කර 52ක් වූ බෞද්ධ පූජා භූමිය ලබන වෙසක් මාසයේ පටන් මුළුමනින්ම බෞද්ධ පූජා භූමියක් බවට පත් වන අතර දැනට එහි ඉදිකර ඇති ඉස්ලාම් ආගමික ඉදිකිරීම් සියල්ල ඒ ආසන්නයේම ඇති වෙනත් වෙන් කල භූමියක් වෙත ගෙන යාමට දැනුම් දී ඇත.කෙසේ වෙතත් එහිදී ඉස්ලාම් සංවිධාන විසින් ඉල්ලා ඇත්තේ පෙබරවාරි 11 වන දින සිට මාර් 31 වන දින දක්වා සිය ආගමික චාරිත‍්‍රයක් පැවැත්වෙන බැවින් ඒ සඳහා ඉඩ ලබා දෙන ලෙසයි. ඒ සඳහා විරෝධයක් දක්වා නැති සියලූ නියෝජිතයන් අදාල කටයුත්තෙන් පසු සියලූ ඉදි කිරීම් ඉවත් කරගන්නා ලෙස දැනුම් දී ඇත.

No comments:

Post a Comment