|
|||||||||||||||||||||||||||||
|
நாட்டில் பௌத்த மதத்தின் தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டே இவ் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை சிங்கள மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் குறித்த அமைப்பு முஸ்லிம்களுக்கும் ஹலால் சான்றிதழுக்கும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டிருந்தது. இந்நிலையில் இன்றைய தினம் முதல் முறையாக வட கிழக்குப்பகுதியில் அவ்வமைப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த ஆர்ப்பாட்டம் மூலம் வடகிழக்குப்பகுதியில் தென்னிலங்கையில் அவ்வமைப்பால் விதைக்கப்பட்டுள்ள முஸ்லிம்கள் தொடர்பான தப்பபிப்பிராயங்களை வடகிழக்கிலும் விதைப்பதே குறித்த ஆர்ப்பாட்டத்தின் நோக்காகும் என அவதானிகள் தெரிவிக்கின்றனர். | |||||||||||||||||||||||||||||
Sunday, February 17
வடகிழக்கில் முதன்முறையாக பொது பல சேனாவின் ஆர்ப்பாட்டம்
Labels:
இலங்கை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment