தேங்காய்
எண்ணெயில் பல்வேறு எண்ணெய் வகைகள் கலக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றமை
தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை
தெரிவித்துள்ளது.
சந்தையிலுள்ள எண்ணெய் வகைகளின் மாதிரிகளை பெற்று அவற்றை பரிசோதிக்க
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதேச நடவடிக்கைகள் தொடர்பான பிரதிப்
பணிப்பாளர் அசேல பண்டார குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு வர்த்தக நிலையங்களிலிருந்து 14 வகையான மாதிரிகளை சேகரிக்க எதிர்ப்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
தேங்காய் எண்ணெயுடன் அதிகளவில் விலை குறைந்த மரக்கறி எண்ணெயே கலக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
No comments:
Post a Comment