ஹலால் சான்றிதழை இடைநிறுத்திக் கொள்வது குறித்து அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை ஆராய்ந்து வருகின்றது.
நேற்று சனிக்கிழமை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை பிரதிநிதிகள் கூடி நீண்ட நேரம் இது குறித்து ஆராய்ந்துள்ளனர்.
முஸ்லிம்களை இலக்கு வைத்து இனவாதிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள்
தீவிரமாகியுள்ளன. எமக்கு முஸ்லிம் சமூகத்தின் நலன்கள் பிரதானமானது. தேசியப்
பாதுகாப்பும் முக்கியத்துவமானது. இந்நிலையில் நேற்று ஜம்மியத்துல் உலமா
சபை, ஹலால் சான்றிதழ் குறித்து நீண்ட நேரம் விவாதித்தது என்று உலமா சபை
முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.
இதன்போது 3 முக்கிய விடயங்கள் குறித்து ஆராயப்பட்டது.
1 ஹலால் சான்றிதழை முஸ்லிம்களுக்கு மாத்திரம் வழங்குவது.
2 ஹலால் சான்றிதழ் வழங்குவதை முற்றாக இடைநிறுத்துவது
3 ஹலால் சான்றிதழ் வழங்குவதை ஒருபோதும் நிறுத்தக்கூடாது என்பதாகும்.
2 ஹலால் சான்றிதழ் வழங்குவதை முற்றாக இடைநிறுத்துவது
3 ஹலால் சான்றிதழ் வழங்குவதை ஒருபோதும் நிறுத்தக்கூடாது என்பதாகும்.
இம்மூன்று விடயங்கள் குறித்தும் ஆரோக்கியமான கருத்துக்கள்
தெரிவிக்க்பட்டுள்ளன. இருந்த போதும் இதுவரை எத்தகைய இறுதி முடிவுக்கும்
வரவில்லை. நாம் அவசரப்பட்டு தீர்மானங்களை மேற்கொள்ள மாட்டோம் என்றும் அவர்
குறிப்பிட்டார்.
இது தொடர்பான கலந்துரையாடல்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளதாகவும் அவர் சொன்னார்.
அதேவேளை முஸ்லிம்களுக்கு எதிராக எழுந்திருக்கும் நெருக்குவாரங்கள்
குறித்து ஆராய்வதற்காக முஸ்லிம் கவுன்சில் நாளை திங்கட்கிழமை கூடி
ஆராயவிருப்பதாக அதன் தலைவர் என்.எம்.அமீன் தெரிவித்தார்.
நாளை திங்கட்கிழமை முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கா தலைமையில் மத முரண்பாடுகள் தொடர்பில் ஆராயப்படவுள்ளது.
இந்நிலையில்தான் முஸ்லிம் கவுன்சிலும் இது தொடர்பில் கலந்துரையாடவுள்ளது
என்றும் இதற்காக முஸ்லிம் எம்.பி.க்கள் மற்றும் முக்கியஸ்தர்களுக்கும்
அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது பல்வேறு முக்கிய விடங்கள்
குறித்தும் ஆராயப்படவுள்ளது எனவும் அமீன் மேலும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment