ஹலால் சான்றிதழ் தொடர்பில் எழுந்துள்ள குழப்ப நிலைகளுக்கு முடிவுகட்டும்
வகையில் அரசாங்கமே ஹலால் சான்றிதழை பொறுப்பேற்க வேண்டும் என அகில இலங்கை
ஜம்இய்யதுல் உலமா சற்று முன்னர் வேண்டுகோள்விடுத்துள்ளது.
ஹலால் விவகாரம் தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தற்போது
கொழும்பு ரண்முத்து ஹோட்டலில் நடத்திக் கொண்டிருக்கும் ஊடகவியலாளர்
மாநாட்டிலேயே இவ்வாறு வேண்டுகோள்விடுக்கப்பட்டுள்ளது.
ஹலால் சான்றிதழ் விவகாரம் இன்று நாட்டில் சமூகங்களுக்கிடையே பிளவுகளைத்
தோற்றுவிக்கும் ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது. உலமா சபை இதன் மூலமாக
நாட்டில் பிரச்சினைகள் தோற்றம் பெறுவதற்கு ஒருபோதும் விரும்பவில்லை.
எனவே ஹலால் சான்றிதழ் வழங்கும் பொறிமுறையை அரசாங்கம் உடனடியாகப்
பொறுப்பேற்பதுடன் சகல சமூகங்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில் அதனை
நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும். இதற்காக தாய்லாந்து மற்றும் சிங்கப்பூர்
போன்ற நாடுகளை முன்மாதிரயாகக் கொள்ள முடியும் எனவும் உலமா சபை
தெரிவித்துள்ளது.
விரிவான செய்தி விரைவில்...
No comments:
Post a Comment