ஜ.நா
மனிதவுரிமைகள் பேரவையின் 2013ம் ஆண்டுக்கான அமர்வுகள் தமிழ் மக்கள்
மத்தியில் எழுந்திருக்கும் எதிர்பார்ப்புக்கள் இ றுதியில் பலத்த
ஏமாற்றத்தையே கொடுக்கும் என கூறியிருக்கும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின்
தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,
வட,கிழக்கு தமிழ் மக்களால் தெரிவு
செய்யப்பட்டிருக்கும் தமிழ்தேசிய கூட்டi மப்பு தமிழ் மக்கள்
எதிர்பார்க்கும் வகையிலான ஒரு சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணையினை கோராத
வரையில், சர்வதேசம் தானாக முன்வந்து அவ்வாற hன விசாரணையினை கோரப்போவதில்லை
எனவும் கூறியுள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போN த அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கின்றார்.
இங்கு மேலும் அவர் குறிப்பிடுகையில்,
கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்த ன் தென்னாபிரிக்க பயணத்தின்போது தான்
கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், 2012ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட
ஜெனீவா தீர்மானத்தை நடை முறைப்படுத்துவதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலான
தீர்மானம் அமைய வேண்டும் என்ற தோரணையில் 2013ம் ஆண்டு நிறைவேற்றப்படுகின்ற
தீர்மான ம் அமையவேண்டும் என குறிப்பிட்டிருக்கின்றார். ஆனால் 2012ம் ஆண்டு
தீர்ம hனம் இலங்கை அரசாங்கம் நியமித்த நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துi
ரகளை நிறைவேற்ற வேண்டும் என கூறுகின்றது.
எனவே நல்லிணக்க ஆணைக்குழுவின்
பரிந்துரைகளை நிராகரித்து, அதனை ஆக்கபூர்வமான வகையில் விமர்சித்த
கூட்டமைப்பு எவ்வாறு மேற்கண்டவாறு கருத்தினை கூறமுடியும். ஆதைவிட 2012ம்
ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட் டபோது இது முதற்கட்டம் என்றே கூட்டமைப்பு
கூறியது.
ஆனால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டடு
1வருட காலத்தில் தீர்மானத்திற்று முன் னர் இருந்ததை விடவும் மோசமான
நிலைக்கு தமிழர்கள் சென்றிருக்கின்றார்க ள் என்பதை ஜ.நா மனிதவுரிமைகள்
ஆணையாளர் நவனீதம் பிள்ளை அம்மை யாரே ஏற்றுக்கொண்டிருக்கின்றார்.
எனவே தமிழ மக்களுடைய ஏக பிரதிநிதிகள் என
கூறிக்கொள்ளும் தமிழ்தேசி ய கூட்டமைப்பு தமிழ் மக்களுடைய 60வருடகால
அரசியல் அபிலாiஷகளை நிறைவு செய்யும் வகையிலான தீர்மானத்தை உத்தியோகபூர்வமான
வலியுறுத்த வேண்டும்.
அதைவிடுத்து புதிய போர்க்குற்ற
ஆதாரங்களுடன் கூட்டமை ஜெனீவா சமர்க்க ளத்தில் என வெளியாகும் பரபரப்பான
செய்திகள்; மூலம் மக்கள் மனங்களில் நம்பிக்கை வளர்ப்பத இறுதியில்
ஏமாற்றத்தையே ஏற்படுத்தும், கடந்தாண்டும் இதே ஏமாற்று வேலையினையே
ஊடகங்களும், கூட்டமைப்பும் செய்தது.
ஆனால் இன்று நடந்து கொண்டிருப்பது
அனைவருக்கும் தெரியும், தமிழர்களு டைய, தமிழ் தேசத்தினுடைய இருப்பு
கேள்விக்குள்ளாகியிருக்கும் நிலையில் இனிமேலாவது இந்த ஏமாற்று அரசியலை
கைவிட்டு, தமிழர்களுடைய நலன்சார் நிலைப்பாடுகளை எடுக்கவேண்டும் என்றார்.
No comments:
Post a Comment