முஸ்லிம் பெண்கள் தமது உடல் முழுதும் மறைத்து அணியும் புர்கா ஆடையானது மத
அடிப்படைவாதத்தை பிரதிபலிப்பதாக கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர்
முஹம்மட் முஸம்மில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இஸ்லாமிய நாடுகளான பாகிஸ்தான்,ஈரான் போன்ற நாடுகளில் இவ்வாறான ஆடை அணிகள்
இல்லை. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர், பங்களாதேஷின் தற்போதைய பிரதமர்
மற்றும் பாகிஸ்தானின் வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் இவ்வாறான ஆடைகளை
அணிவதில்லை. இந்நாட்டில் அவ்வாறான ஆடை பயன்படுத்தப்படுவது அடிப்படைவாத
குழுவொன்றின் நடவடிக்கையாக இருக்க முடியும் என தெரிவித்துள்ளதாக உள்ளூர்
ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment