ஹலால் சான்றிதழ் வழங்கும் செயற்பாட்டை தமது மேற்பார்வையின் கீழ் அரசாங்கம்
பொறுப்பேற்க வேண்டும் எனும் உலமா சபையின் அறிவிப்பை பொதுபல சேனா
நிராகரித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை இரவு தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல்
நிகழ்ச்சியிலேயே பொதுபல சேனா பிரதிநிதிகள் இவ்வாறு தெரிவித்துள்ளதாக 'கொழும்பு கஸட்' செய்தி
ஹலால் விவகாரம் தொடர்பில் நீண்ட கலந்துரையாடல்களை நடத்த வேண்டியுள்ளது.
உலமா சபை முன்வைத்துள்ள யோசனை இப் பிரச்சினைக்கு ஒருபோதும் நிரந்தரத்
தீர்வாக அமையாது எனவும் பொதுபல சேனா இதன்போது குறிப்பிட்டுள்ளது.
நாங்கள் ஒருபோதும் ஹலால் சான்றிதழுக்கு எதிரானவர்களல்ல. ஹலால் சான்றிதழ்
பொறிக்கப்பட்ட உணவுகளையே கொள்வனவு செய்ய வேண்டும் என்ற முஸ்லிம்களின் மத
உரிமையை நாம் மதிக்கிறோம். ஆனால் ஹலால் சான்றிதழ் பொறிக்கப்பட்ட பொருட்கள்
பெளத்த மக்களுக்கு விற்பனை செய்யப்படக் கூடாது என்பதையே நாம் எதிர்க்கிறோம்
எனவும் பொதுபல சேனா பிரதிநிதிகள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment