தம்புள்ளை நகரத்திலும் பஸ்தரிப்பு
நிலையத்தினுள்ளும் தொடர்ந்தும் அசுத்தமாக காணப்பட்டமைக்கு தீர்வாகவும்,
தம்புள்ளை நகருக்குள் சுத்தத்தை பேணவும் நகருக்குள் வெற்றிலை சாப்பிட்டு
எச்சில் துப்பும் நபர்களுக்கு எதிராக 5,000 ரூபா தண்டப்பணம் நியமிக்கப்
போவதாக நகராதிபதி ஜாலிய ஓபாத தெரிவித்தார்.
தம்புள்ளை நகரை பொருளாதார மற்றும் உல்லாச
இடமாக அபிவிருத்தி செய்யும் போது வெற்றிலை சாப்பிடும் நபர்கள்
இடத்துக்கிடம் எச்சில் துப்புவதால் நகரம் அசுத்தமாகிறது.
எனவே, ‘வெற்றிலைத் தடையை’ 2013 மார்ச் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப் படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதற்கான சட்டதிட்டங்களை விரைவில் கொண்டுவரப்போவதாக தம்புள்ளை நகராதிபதி மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment