அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் குழுவினர் இன்று அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடாதிபதிகளை சந்திக்கின்றனர்.
இன்று பிற்பகல் 2
மணிக்கு அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரரையும் 3 மணிக்கு மல்வத்து பீட
மகாநாயக்க தேரரையும் உலமா சபையின் குழு சந்திக்கவுள்ளதாக உலமா சபை
தெரிவித்தது.
அண்மைக்காலமாக
சர்ச்சைகளை தோற்றுவித்திருக்கும் ஹலால் மற்றும் முஸ்லிம்களின் வரலாறு
தொடர்பில் இதன் போது ஆராயப்படவுள்ளதாக உலமாசபையின் தகவல்கள் தெரிவித்தன.
மகாநாயக்க தேரர்களை சந்திக்கும் உலமா சபை
குழுவில் அதன் தலைவர் அஷ்ஷேய்க் ரிஸ்வி முப்தி ,அஷ்ஷேய்க்
எம்.ஏ.எம்.முபாரக், தாசிம் மெளலவி, பாசில் பாரூக்,முர்சித்
முழப்பர்,பஸ்ருல் ரஹ்மான்,ஹாசிம் சூரி, மெளலவி புர்ஹான் ஆகியோர்
உள்ளடங்கியுள்ளனர்.
- விடிவெள்ளி
No comments:
Post a Comment