Wednesday, February 27

பௌத்த, முஸ்லிம் முரண்பாட்டை ஆராய குழு நியமனம் - ரணில் அறிவிப்பு



பௌத்த மற்றம் முஸ்லிம் இனத்தவர்களிலேயே முரண்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் இடம்பெறும் செயற்பாடுகள் குறித்து ஆராய்வதற்கான குழு ஒன்றை ஐக்கிய தேசிய கட்சி நியமித்துள்ளது.

சிறிகொத்த கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போது இடம்பெற்று வருகின்ற சம்பவங்கள் தொடர்பில் விரிவான ஆராய்வை மேற்கொண்டு, மூன்று வாரங்களுக்குள் அறிக்கைப்படுத்துமாறு குழுவிடம் கோரப்பட்டுள்ளது. பௌத்த அடிப்படைவாத குழுவான பொதுபலசேனா உள்ளிட்ட பல்வேறு குழுக்களால், முஸ்லிம் மற்றும் சிங்கள் மக்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றுவிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment