ஈரானிய ஜனாதிபதி செவ்வாயன்று
எகிப்துக்கு பயணம் செய்யவுள்ளதுடன் அங்குள்ள அல் -அஸ்ஹர் கல்வி நிலையத்தின் முன்னனி
ஸுன்னி மார்க்க அறிஞர் ஒருவரை சந்தித்து பல விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்
இந்த சந்திப்பு முஸ்லீம்களின்
இரு முக்கிய பிரிவுகளான ஷியா -ஸு ன்னி
ஆகிவற்றுக்கு இடையிலான அதிகரித்து வரும் பிணக்குகளுக்கு முடிவு காண
வழிவகுக்கலாம் என்று கூறப்படுகின்றது
கெய்ரோவில் உள்ள அல் -அஸ்ஹர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஷேய்க் அல் தய்யிபை சந்தித்து அரபு மற்றும் சர்வதேச விவகாரம் ,மற்றும் அல் -அஸ்ஹர் பலகலைக்கழகத்தின் உள்ளூர் மற்றும் பிராந்திய பங்களிப்புகள்
போன்ற விடயங்கள் குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்
அஹ்மதினஜாதுக்கும் ஷேய்க் அல் தய்யிபுக்கும் இடையே இடம்பெரும் முதல் சந்திப்பு இதுவாகும்
கெய்ரோவில் இடம்பெறும் இஸ்லாமிய
நாடுகளின் உச்சிமாநாட்டிலும் அவர் கலந்து கொள்ளவுள்ளார்
பெப்ரவரி 6ஆம்
7 ஆம்
திகதிகளில் இஸ்லாமிய நாடுகள அமைப்பின் மாநாடு (ஓ ஐ சி ) இடம்பெற உள்ளது
அண்மையில்ஈரானிய வெளிநாட்டமைச்சர்
அலி அக்பர் சலாஹிக்கும் ஷேய்க் அல் தய்யிக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் ஷியா -ஸு ன்னி ஒற்றுமை வலியுறு த்தப்பட்டிருந்தது
"எதிரிகள், அண்மைக்காலமாக
இடம்பெற்றுவரும் சம்பவங்களை வைத்து இரு முஸ்லீம்களுக்கிடையே பிரிவை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றார்கள் " என்று ஈரானிய வெளிநாட்டமைச்சர் கூறியிருந்தார்
No comments:
Post a Comment