Tuesday, February 5

ஒபாமா கேட்கவும் இல்லை ஜனாதிபதி மறுக்கவும் இல்லை – ஜனாதிபதி ஊடக பேச்சாளர்.

mohansamaranayaka_05022013இலங்கை படைகளை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைக்குமாறு அமெரிக்கா விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மறுத்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தது.
ஆயினும் இலங்கை படைகளை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைக்குமாறு அமெரிக்கா கோரிக்கை விடுக்கவும் இல்லை அதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மறுக்கவும் இல்லை என ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment