இஸ்லாமிய வங்கிகள் , முஸ்லிம் தனியார்
சட்டங்கள் , காதி நீதிமன்றங்கள் என முஸ்லிம்களின் அடுத்த உரிமைகளிலும்
தலையிடுகிறது பொதுபல சேனா, முஸ்லிம்கள் இனியும் மௌனமாய் பார்த்துக்
கொண்டிறாது அடுத்த வெள்ளியன்று நாடுமுழுவதும் முழுமையான கட்டுக்
கோப்புடன் தமது ஒருமித்த ஜனநாயக ரீதியிலான எதிர்ப்பை நாட்டிற்கும்
உலகிற்கும் தெரிவிக்க முன்வர வேண்டும்.
முஸ்லிம்களின் தொடர்ந்தேர்சியிலான
மௌனமும் விட்டுக் கொடுப்புக்களும் பின்வாங்கல்களாக அல்லது கோழைத் தனமாக
எவராலும் கருதப் படக் கூடாது. முஸ்லிம்கள் விகித சிறுபான்மை என்பது
எதோ உண்மைதான், அனால் இந்த நாட்டில் ஆயிரம் வருடங்களுக்கு மேல் நிலவும்
சமாதான சகவாழ்விற்கு சவால் விடும் இந்த மதவாத இனவாத தீவிர வாதிகள் நாட்டில்
தசம் ஐந்து வீதமும் இல்லை அவர்களுக்கு நாடு முழுவதும் முஸ்லிம் விரோத
செயற்பாடுகளில் ஈடு பட முடியுமெனில் நாம் ஏன் மௌனமாக இருக்க வேண்டும்.
அவர்களுக்கு அனுமதி பாதுகாப்பு
வழங்கும் அரசு முஸ்லிம்களுக்கும் அனுமதியும் வழங்கும் என
நம்புகின்றேன். முஸ்லிம் அரசியல் வாதிகள் சகலரும் களத்தில் இறங்க வேண்டும்
இன்றேல் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் அதிரடி நடவடிக்கைகளை
எடுக்க வேண்டும்.
முஸ்லிம்கள் ஜனநாயாக ரீதியில்
ஆர்ப்பாட்டம் செய்து தமது எதிர்ப்புக்களை தெரிவிக்க முன்வரும் பட்சத்தில்
ஐக்கிய தேசியக் கட்சி ,மக்கள் விடுதலை முன்னணி , மக்கள் முற்போக்கு
முன்னணி உற்பட ஆளும் எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த பல தேசிய அரசியல் சக்திகளும்
தமது ஆதரவை தெரிவிக்க வுள்ளதாக ஏற்கனவே குறிப்பிட்டிருந்தனர்.
பொது பல சேனாவின் அரசியலுக்கு அரசியல்
ரீதியில் தேசிய சக்திகளுடன் சேர்ந்தே முஸ்லிம்கள் முகம் கொடுக்க வேண்டும், அவ்வாறு அரசியல்
கலப்பை விரும்பாத விடத்து முதற்கட்டமாக முஸ்லிம்கள் ஒரு சமூகம் என்ற வகையில் அரசியல் வேறுபாடுகள் மறந்து
தமது எதிர்ப்பை தெரிவிக்க முன்வர வேண்டும்.
No comments:
Post a Comment