Wednesday, February 27

ஹலால் சான்றிதழ் :பல்டி அடித்தார் ரணில்

ஜம்இய்யதுல் உலமா சபையிடமிருந்து ஹலால் சான்றிதழ் வழங்கும் உரிமையை அரசு பொறுப்பேற்பது திருப்திகரமாக அமையாது என ஐயக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஹலால் சான்றிதழ் வழங்குவதை அரசு பொறுப்பேற்க வேண்டும் என அண்மையில் கருத்து தெரிவித்திருந்த அவர் தற்போது அது திருப்திகரமாக அமையாது என பல்டி அடித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
 
ரணில் விகரமசிங்க மேலும் தெரிவித்துள்ளதாவது,
 
குளியாபிட்டியவில் அல்லாஹ் என்ற நாமத்தை பன்றியின் உருவத்தில் எழுதி ஊர்வலமாக கொண்டு சென்றமை தொடர்பான சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை. அது குறித்து அரசு மன்னிப்பு கோரவேண்டும்.
 
சிங்கள-முஸ்லிம் நல்லிணக்கம் தொடர்பில் மேற்கொள்ளப்படவேண்டிய செயற்பாடுகள் நிறையவே உள்ளன. 
 
அதனாலேயே சிங்கள – முஸ்லிம் மக்களிடையே உண்டான விரும்பத்தகாத பிரச்சினைகளை ஆராய்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் ஹபீர் ஹாசிம் தலைமையில் ஒரு முழுவை நியமித்துள்ளோம். இரண்டு வாரங்களில் அந்த குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் .
 
இந்த குழுவில் கொழும்பு மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மில், மாகாண சபை உறுப்பினர்களான முஜீபுர் ரஹ்மான், பைரூஸ் ஹாஜி மற்றும் எம்.என். நசீர் ஆகியோர் அங்கத்துவம் வகிக்கின்றனர். என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment