Wednesday, February 27

ஷரீஆ, இஸ்லாமிய வங்கி, காதி நீதிமன்றங்களிலும் கைவைக்கிறது பொது பல சேனா





ஹலால் சான்றிதழ் உடனடியாக வாபஸ் பெறப்படவேண்டும் எனவும் சமய , ஷரீஆ சட்டங்களுக்கு இந்நாட்டில் இடமளிக்க முடியாது எனவும் பொது பல சேனாவின் செயலாளர் கலகொட  அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற பொது பல சேனாவின் விஷேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஹலால் வேண்டாம். இந்நாட்டில் சமய, ஷரீஆ சட்டங்களுக்கு இடமில்லை. அத்துடன் சரீஆ சட்டத்தின் கீழ் செயற்படும் இஸ்லாமிய வங்கி மற்றும் நிதி முறைமைகள் தொடர்பிலும் நாம் கவனம் செலுத்தியுள்ளோம். இது தொடர்பில் வீடு வீடாக சென்று மக்களை தெளிவு படுத்தவும் பொது பல சேனா தயாராகவே உள்ளது.

இதனைவிட இந்நாட்டில் காதி நீதிமன்ற கட்டமைப்பொன்று உள்ளது.அது தொடர்பிலும் பொது பல சேனா அவதானம் செலுத்தியுள்ளது. என தெரிவித்தார்.
.

No comments:

Post a Comment