Friday, February 8

உர அதிகாரங்கள் அனைத்தும் விவசாய அமைச்சிற்கு மாற்றம்

உர அதிகாரங்கள் அனைத்தும் விவசாய அமைச்சிற்கு மாற்றம்


கமநல சேவைகள் மற்றும் வனஜீவராசிகள் அமைச்சின் கீழிருந்த அனைத்து உர நிறுவனங்களும் விவசாய அமைச்சின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

விவசாய அமைச்சின் செயற்பாடுகளை பயன்படும் வகையில் நிறைவேற்ற இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி வரையறுக்கப்பட்ட இலங்கை உர நிறுவனம், கெழும்பு கொமர்ஷல் உர நிறுவனம், தேசிய உர செயலாளர் காரியாலயம், கமன்கடுவ அப்ரோ பைற்றிலைசர் நிறுவனம் மற்றும் வரையறுக்கப்பட்ட ஜனத்தா பைற்றிலைசர் என்டர் பிறைசர் நிறுவனம் ஆகியன விவசாய அமைச்சின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment