Saturday, February 9

சிங்கள பௌத்த மதத்தை பாதுகாக்க விசேஷ அமைப்பு உருவாக்கம்



சிங்கள பௌத்த மதத்தை பாதுகாப்பதற்கு விசேட அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. பௌத்த மஹாநாயக்க தேரர்களை உள்ளடக்கிய வகையில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மூன்று பீடங்களினதும் மஹாநாயக்க தேரர்களின் பங்களிப்புடுன் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. கண்டி தலதா மாளிகையில் நேற்று இந்த அமைப்பு உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
சிங்கள இனத்திற்கும் பௌத்த மதத்திற்கும் எதிரான சவால்களை முறியடிப்பதே இந்த அமைப்பின் நோக்கமாகும். எதிர்காலத்தில் பௌத்தர்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டின் முக்கியமான பௌத்த மதத் தலைவர்கள் இந்த அமைப்பை வழிநடாத்துவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment