ஹலால்
சான்று வழங்கப்படுவது தொடர்பில் அகில இலங்கை ஜமியத்துல் உலமா அமைப்பு
குறித்து எதிர்கட்சித் தலைவர் முன்வைத்த கருத்துக்களுக்கு அரசாங்கம் கவலை
வெளியிட்டுள்ளது.நேற்றைய தினம் பாராளுமன்றில் எதிர்கட்சித் தலைவர் ஆற்றிய
உரைக்கு இன்று (07) சபையில் பதிலளித்த சபை முதல்வர் நிமால் சிறிபால டி சில்வா மேற்கண்டவாறு கவலை வெளியிட்டார்.
கடந்த
ஜெனிவா மாநாட்டின் போது சர்வதேசத்தில் இருந்து வந்த அழுத்தங்களில் இருந்து
இலங்கையை பாதுகாக்க அகில இலங்கை ஜமியத்துல் உலமா அமைப்பு பாரிய
பங்காற்றியுள்ளதென அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சுட்டிக்காட்டினார்.இந்த
அமைப்பு எதிர்கட்சியின் கைபொம்மை இல்லை என்பதால் அந்த அமைப்பு குறித்து
எதிர்கட்சி முன்வைத்த கருத்திற்கு கவலையடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில உற்பத்திகளுக்காக சர்வதேச ரீதியில்
ஹலால் சான்றிதழ் பெற்றுக் கொள்வது சர்வதேச வர்த்தகத்தின் முக்கிய தேவைகளில்
ஒன்றாக முஸ்லிம் நாடுகளும் சில மேற்குலக நாடுகளும் கருதுகின்றன. ஹலால்
சான்றிதழை வழங்கும் மத்திய நிலையம் இந்தோனேசியாவில் உள்ளது. அந்த அமைப்பு
(வோர்வ்ட் ஹலால் புட் கவுன்ஸில்) உலகின் பல நாடுகளின் அமைப்புக்களை
உறுப்பினர்களாக ஏற்றுக் கொண்டுள்ளது.
இலங்கையில் அகில இலங்கை ஜமியத்துல் உலமா
அமைப்பு அவ்வாறு ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும். இந்த அமைப்பு அரசினாலும்
அரச அமைப்பினாலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அவ்வாறு ஏற்றுக் கொள்ள
வேண்டியதன் அவசியம் குறித்து கேள்வியில்லை. இது முஸ்லிம் சமயத்துடன்
சேர்ந்தது.
ஹலால் உணவு தயாரிப்புக்களை வாங்குவது,
நிராகரிப்பதற்கான உரிமை அனைவருக்கும் உள்ளது. அதில் யாருக்கும் அழுத்தம்
கொடுக்க முடியாது. தாய்லாந்து ஹலால் சான்று நிறுவனத்துடன் அகில இலங்கை
ஜமியத்துல் உலமா அமைப்பு புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில்
கைச்சாத்திட்டுள்ளது.இவ்வாறு அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா
தெரிவித்தார்.-அத தெரண
அதேவேளை
சபை முதல்வர் நிமால் சிறிபால டி சில்வாவின் கருத்துடன்
முரண்படும் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க அகில இலங்கை
ஜம்இயத்துல் உலமா ஹலால் சான்றிதழ் விநியோகிப்பதன் மூலம் மோசடியான முறையில்
பணம் சம்பாதிப்பதாக மோசமான குற்றசாட்டை முன்வைத்துள்ளார் .
மேலும் ரணில் விக்ரமசிங்க அகில இலங்கை
ஜம்இயத்துல் உலமா மோசடியில் ஈடுபடுவதாகவும் , கடந்த நகர சபை தேர்தலின் போது
மிலிந்த மொரகொடவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ததாகவும் தெரிவித்துள்ளார் .
No comments:
Post a Comment