Wednesday, February 6

எகிப்தில் ஈரான் ஜனாதிபதி மீது சப்பாத்து வீச்சு


எகி்ப்து வந்துள்ள ஈரான் அதிபர் மகமூத் அகமதி நிஜாத் மீது ஷூ வீசப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் கெய்ரோவில் உள்ள பழமையான வழிபாட்டு தலத்தை பார்வையிட்டுக் கொண்டிருந்த ஈரான் அதிபர் அகமதிநிஜாத் மீது ஷூ வீசப்பட்டது. அது அவர் மீது படவில்லை

போலீசார், ஷூ வீசிய நபரிடம் விசாரணை நடத்தியதில், அவர் சிரிய நாட்டு ஆதரவாளர் என்பது தெரிய வந்துள்ளது. 3 தலைமுறைகளுக்கு பிறகு, ஈரான் தலைவர் ஒருவர் தற்போது தான் எகிப்திற்கு வந்துள்ள நிலையில், அவர் மீது தாக்குதல் சம்பவம் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment