ஏ.அப்துல்லாஹ்:
முஸ்லிம் நாடுகளுக்கு முஸ்லிம்களை தூதுவராக அனுப்ப வேண்டும் என்று
ஜம்மியதுல் உலமா கூறுவதாக வெளியான தகவலை உண்மையில்லை என்று மறுக்கும்
ஜம்மியதுல் உலமா வட்டாரங்கள் சவூதிக்கு நியமிக்க படும் தூதுவர் முஸ்லிமாக
இருந்தால் வருடம் தோறும்
இடம்பெறும் ஹஜ் விவாகரத்தை இலகுவாக கையாள முடியுமாக இருக்கும் காரணம் மக்கா
, மதீனா மஸ்ஜித் பகுதிகளுக்கு சென்று நேரில் ஹஜ் விவகாரங்களை கையாள
வேண்டிப்பதால் அதனை ஒரு முஸ்லிம் அல்லாதவரால் செய்வதில் நிறைய நடிமுறை
சிக்கல்களும், தடைகளும் இருக்கின்றது அதன் காரணமாக ஹஜ் கடமையை நிறைவேற்ற
செல்லும் முஸ்லிம்கள் மேலும் சிரமங்களை எதிர்கொள்ள எதுவாக அமையலாம் என்றும்
இதுவரை சவூதிக்கானக்கான இலங்கை
தூதுவர்கள் ஆண்டுதோறும் ஹஜ் கடமையை ஒழுங்கு செய்வதில் முக்கிய
பங்காற்றியுள்ளார்கள் காரணம் அவர்கள் மக்கா , மதீனா மஸ்ஜித் பகுதிகளுக்கு
நேரில் சென்று விடயங்களை கையாண்டார்கள் ஆனால் முஸ்லிம் அல்லாத ஒருவருக்கு
அப்படி அங்கு நுழைந்து செயல்பட முடியாது என்று தெரிவித்தனர் . உலகில்
இரண்டு மஸ்ஜித் பகுதிகளுக்கு மக்கா , மதீனா பகுதிகளுக்கு இஸ்லாத்தை
ஏற்றுக்கொண்ட ஒருவரால் மட்டுமே நுழைய முடியும் என்று இஸ்லாம்
அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment