Friday, February 1

ரணிலுடனான சந்திப்பில் உலமா சபை பங்கேற்கவில்லை







முஸ்லிம்களுக்கு எதிராக அண்மைக்காலமாக பௌத்த கடும்போக்கு அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டுவரும் தீவிர பிரசாரங்கள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் முஸ்லிம் கவுன்சில் இன்று நடத்திய சந்திப்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பிரதிநிதிகள் பங்கேற்கவில்லை எனத் தெரியவருகிறது.
 
அண்மைக் காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் வெறுப்புணர்வு பிரசாரங்கள் தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சிலும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவும் பல்வேறு அரசியல் தரப்புகளையும் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன. அதன் தொடரிலேயே இன்றைய தினம் எதிர்க்கட்சித் தலைவருடன் இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
 
குறித்த சந்திப்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பிரதிநிதிகள் பங்கேற்பதாக ஆரம்பத்தில் உறுதிப்படுத்தப்பட்டிருந்தபோதிலும் இறுதி நேரத்தில் தம்மால் கலந்து கொள்ள முடியாது என அறிவித்ததாக தெரியவருகிறது.

No comments:

Post a Comment