Friday, February 1

தந்தையின் தாக்குதலில் பெண் பிள்ளை பலி


சவுதி அரேபியாவில் தந்தையின் தாக்குதலுக்கு இலக்காகி பெண் பிள்ளையொன்று  உயிரிழந்த சம்பவம் மக்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐந்து வயதான பெண் பிள்ளையொன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
தொலைகாட்சியில் வழமையாக தோன்றி அறிவுரைகளை வழங்கும் ஒருவரே தனது மகளை தாக்கி கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிள்ளையின் மரணம் தொடர்பில் கடந்த நவம்பர் மாதம் தந்தை கைது செய்யப்பட்ட போதிலும், வழக்கின் குற்றச்சாட்டில் இருந்து நீதிபதியால் அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த தீர்ப்பை அடுத்து பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தும் இணைத்தளம் மூலமான பிரசாரங்கள் தீவிரமடைந்துள்ளன.

No comments:

Post a Comment