எரிபொருள் விலையேற்றத்தை கருத்திற்கொண்டு இந்த கட்டண அதிகரிப்பை
மேற்கொள்வதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள்
சங்கத்தின் தலைவர் ஜி.சுதிஸ் தில்ருக் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் முதலாவது கிலோமீற்றருக்காக அறவிடப்படுகின்ற 50 ரூபா கட்டணத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என அவர் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது கிலோமீற்றரிலிருந்து இதுவரை காலமும் அறவிடப்பட்ட 35 ரூபா
கட்டணம் 38 ரூபா வரையும் 38 ரூபா கட்டணம் 40 ரூபா வரையும்
அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டண அதிகரிப்பு நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படவுள்ளதாக அகில
இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்களின் சங்கம்
அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment