இச்சந்தப்பின் போது, பொது பல சேனா, ஜாதிக
ஹெல உறுமய போன்ற அமைப்புகளினால் இலங்கையில் வாழும் முஸ்லிம்களுக்கு
ஏற்படுத்தப்பட்டிருக்கும் அச்சுறுத்தல் மற்றும் நாட்டின் சுபீட்சத்திற்கும்
நன்மதிப்புக்கும் ஏற்படுத்தப்பட்டிருக்கும் களங்கங்கள் தொடர்பாகவும்
சுட்டிக்காட்டிய இவ்வமைப்பினர் தமது அமைப்பு சார்பில் அவரிடம் மகஜர்
ஒன்றையும் கையளித்தனர்.
இனவிரோதத்தைப் பரப்பும் இணையத்தளங்களை தடை
செய்தல், சமாதானத்திற்கான கூட்டமைப்பொன்றை உருவாக்குதல், பாடசாலை முதல்
பல்கலைக்கழக மட்டங்களில் “இணைந்து வாழ்வதன்” அவசியத்தை வலியுறுத்தும்
விழிப்புணர்வூட்டல் மற்றும் பாரபட்சமற்ற நிலைப்பாட்டில் சட்டத்தை அமுல்
படுத்தல் ஆகிய ஐந்து கோரிக்கைகள் அடங்கிய இம்மகஜரைப் பெற்றுக்கொண்டுள்ள
உயர்ஸ்தானிகள் இதை அரசிடம் சேர்ப்பதாகவும் வாக்களித்துள்ளார்.
ஐக்கிய இராச்சியத்தில் இயங்கும் சுமார் 17
இலங்கை முஸ்லிம்கள் சார்பான அமைப்புகள் அங்கம் வகிக்கும் கொஸ்மோஸ் சார்பாக
லெஸ்டர், ரெடிங், க்ரோலி, ஸ்லாவ், ஹமல் ஹம்பஸ்டட், ஹரோ, மேற்கு மற்றும்
கிழக்கு லண்டன் பகுதி அமைப்புகளின் உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்து
கொண்டனர்.
தம்புல்லையில் இடம்பெற்ற
சம்பவத்தினையடுத்து முஸ்லிம்களின் குரலை ஒன்றிணைப்பதற்காக உருவாக்கப்பட்ட
இவ்வமைப்பு கடந்த வருடம் உடனடியாக உயர்ஸ்தானிகரை சந்தித்ததோடு இம்மாத ஆரம்பத்தில் மதங்களுக்கிடையிலான நல்லிணக்க நிகழ்வொன்றையும் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment