ஹபாயா அணிந்து வந்து கப்பம் பெற முற்பட்டவர் மடக்கிப் பிடிப்பு
முஸ்லிம் பெண்ணைப் போன்று முகத்தை மூடியவாறு கறுப்பு நிற ஹபாயா அணிந்து
கைத்துப்பாக்கி, கூரான ஆயுதங்களுடன் வங்கியினுள் நுழைந்து, வங்கி
முகாமையாளரிடம் மூன்று இலட்சம் ரூபா கப்பம் பெற வந்த இராணுவச் சிப்பாய்
ஒருவரை கண்டி குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச் சம்பவம் நேற்று புதன்கிழமை முற்பகல் கண்டி மஹியாவை பிரதேசத்திலுள்ள
அரச வங்கியொயின்றில் இடம்பெற்றுள்ளது. ஹபாயா அணிந்து வங்கிக்குள்
பிரவேசித்தவரின் மீது சந்தேகம் கொண்ட வங்கி பாதுகாப்பு உத்தியோகத்தர் அவரை
சோதனை செய்துள்ளார்.
அவர்
தப்பியோட முயன்ற போது பாதுகாப்பு உத்தியோகத்தர் அவரைப் பிடித்து சோதனையிட்ட
போது கைத்துப்பாக்கி ஒன்றும் கூரான கத்தியும் கண்டுபிடிக்கப்பட்டதுடன்,
அவரின் கைப்பைக்குள் முகாமையாளருக்கு மூன்று இலட்சம் ரூபா கப்பம்
வழங்குமாறு கூறி ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கடிதம் ஒன்றும்
கைப்பற்றப்பட்டது.
இது தொ டர்பில் கண்டி பொலிஸாருக்கு தகவல்
தெரிவித்ததையடுத்து பொலிஸார் அவரைக் கைது செய்து விசாரணைக்குட்படுத்தியப்
போது, அவர் கொத்மலை இராணுவ முகாமின் மொழி பயிற்சிப் பிரிவில்
கடமையாற்றுபவர் எனத் தெரியவந்துள்ளது. பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை
மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment