Friday, February 1

உங்கள் வீடுகளுக்கு இனிமேல் வெளிநாட்டு பார்சல்கள் வரும்..!


(Sfm) வெளிநாடுகளில் இருந்து அனுப்பபப்டும் பரிசு பொதிகளை நேரடியாக பெறுநரின் இல்லத்திற்கே விநியோகிப்பதற்கான புதிய நடைமுறை ஒன்றை இலங்கை சுங்கம் மேற்கொள்ளவுள்ளது. கிராமங்கள் உட்பட நாட்டின் எந்த பகுதிக்கும் இந்த சேவையினை மேற்கொள்ள தமது திணைக்களம் திட்டமிட்டுள்ளதாக சுங்க இயக்குனர் நாயகம் ஜகத் பீ விஜேவீர தெரிவித்துள்ளார்.
இந்த புதிய திட்டத்தின் மூலம் வெளிநாட்டு வேலை வாய்பினை பெற்று செல்லும் கிராம மக்கள் பெறும் நன்மையடைவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை காலமும் வெளிநாடுகளில் இருந்து வரும் பரிசு பொதிகளை கொழும்பு சுங்கத்திணைகளத்தில் இருந்து அவற்றை பெறுவதில் குறிப்பாக கிராம மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.
இலங்கைக்கு கணிசமான வெளிநாட்டு செலாவணியை பெற்று கொடுக்கும் இவர்களின் சேமநலன்களையும் கௌரவத்தையும் கவனத்தில் கொண்டே இந்த புதிய திட்டம் அமுல்படுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, தற்போது 17 லட்சம் இலங்கையர்கள் வெளிநாடுகளில் இருந்து பெருந்தொகையான நிதியினை வருடாந்தரம் அனுப்பி வருகின்றனர். கடந்த வருடத்தில் மாத்திரம் 600 கோடி அமெரிக்க டொலர்கள் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது 

No comments:

Post a Comment