Friday, February 1

கட்டாரில் மரண தண்டனையை எதிர்நோக்கும் இலங்கையரை காப்பாற்ற முயற்சி

கட்டாரில் மரணதண்டனையை எதிர்நோக்கும் இலங்கையைச் சேர்ந்த 22 வயதான வெங்கடாச்சலம் சுதேஸ்கரை விடுவிப்பதற்கான குருதிப் பணத்தை வழங்குவதற்கான நிதி உதவிக்கு ஆசிய மனித உரிமைகள் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.
மிகவும் வறிய குடும்பத்தைச் சேர்ந்த சுதேஸ்கர் ஒரு கை கலப்பில் கேரளாவைச் சேர்ந்த இளைஞரை கொலை செய்ததாக அவருக்கு கடந்த 31 ஆம் திகதி கட்டாரில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
ஆயினும் இறந்தவரின் குடும்பத்தோடு செய்யப்பட்ட சமரசத்தை குருதிப் பணமாக பெற்று சுதேஸ்கரை மன்னிக்க இறந்தவரின் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டுள்ளனர்.
ஆயினும் இந்தப் பணத்தை திரட்ட முடியாத வறிய நிலையில் உள்ள சுதேஸ்கரின் குடும்பத்தினர் இதுதொடர்பாக இலங்கை அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதியிடம் முறையிட்டும் பலன் கிட்டவில்லை என்று கூறியிருந்தனர்.
இதனையடுத்து தாமும் அரசாங்கத்திடம் இதுகுறித்து தொடர்பு கொண்டதாக கூறும் ஆசிய மனித உரிமைகள் ஆணைய இயக்குனரான பசில் பெர்னான்டோ, இலங்கை வேலைவாய்ப்பு பணியகத்திடம் இருந்தோ அல்லது ஜனாதிபதியிடம் இருந்தோ இந்த பணக்கொடுப்பனவுக்கான எந்தவிதமான உறுதி மொழியையும் பெற முடியாது போனதால் தாமே இந்தப் பணத்தை சேகரிக்க முன்வந்துள்ளதாக தெரிவித்தார்

No comments:

Post a Comment