Friday, February 1

ஷரியாவுக்கும் மனித சட்டங்களுக்குமிடையிலான இடைவெளி களையப்பட வேண்டும் : சவுதி சட்ட வல்லுனர்


ஷரியா சட்டங்களுக்கும் மனிதனால் உருவாக்கப்பட்ட சட்ட திட்டங்களுக்குமிடையிலான இடைவெளி இல்லாமலாக்கப்பட வேண்டும் என சவுதி அரேபியாவைச் சேர்ந்த சட்ட வல்லுநர் அஹ்மத் அல் ஷாகி கருத்து வெளியிட்டுள்ளார்.
இரு முறைகளுக்குமிடையிலான வித்தியாசங்களைக் களைவதன் மூலம் பல குழறுபடிகளைக் குறைக்கலாம் எனவும் தண்டனை விவகாரங்கள் சிறப்பாகக் கையாளப்பட முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஹமட் அல் ஜாசர் நிலையத்தில் நேற்று இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஷரியாவிற்கு முற்பட்ட ரோமர்களின் சட்டங்கள் கூட ஷரியாவின் நிலையான இடத்தைப் பெற முடியாது. உண்மையில் ஷரியா அடிப்படையில் மிகத் தெளிவான, மனித நேயத்துக்கு சிறப்பான வழிமுறைகளே இருக்கின்றன என்பதையும் சுட்டிக்காட்டிய அவர் இது குறித்த முறையான செயற்பாடுகளைக் கொண்டு நபியவர்கள் காட்டித்தந்த வாழ்க்கை முறையை சிறப்பாக நிறுவ முடியும் எனவும் கருத்து வெளியிட்டுள்ளார்.
சட்ட திட்டங்களைத் தனித்தனியாகக் குழப்பிக்கொள்ளாமல் எகிப்திய பல்கலைக்கழகங்களில் போன்று சட்டங்களை ஒன்றிணைத்தே கற்பிக்கலாம் என்றும் அவர் மேலும் கருத்து வெளியிட்டமை இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

No comments:

Post a Comment