Wednesday, February 6

குர்ஆனின் அடிப்படையில் முஸ்லிம்கள் செயற்பட வேண்டும் - ஓமல்பே சோபித தேரர்




புதிய ஹலால் மற்றும் ஹராம் முறைமையானது உயர்ந்த சிங்கள - முஸ்லிம் மக்களுக்கு இடையிலான ஐக்கியத்திற்கு தடையாக இருப்பதாக ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரியில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். தினமும் நாம் ஹலால் உற்பத்திகளுக்காக 20 ரூபாவை செலவிடுகிறோம். ஹலால் உணவை சாப்பிடாவிட்டால் நரகத்திற்கு செல்வோம் எனக் கூறுகின்றனர். திருமணத்தில் ஹலால் தடைசெய்யப்பட்டுள்ளது. ஜப்பான் முஸ்லிம் மக்கள் நரகத்திற்கு செல்கின்றனரா?.


இது மத பிரச்சினையல்ல. உண்மை குர் ஆனில் உள்ளது. புதிய ஹலால் முறைமையானது உயர்ந்த சிங்கள - முஸ்லிம் ஐக்கியத்திற்கு தடையானது. ஹலால் இலச்சினைக்காக நிறுவனங்களிடம் அறவிடப்படும் பணம் நுகர்வோர் மீது சுமத்தப்படுகிறது. 100 கோடி ரூபா அறிவிடும் போது அதில் 70 கோடி ரூபா சிங்களவர்களுடையது.

சிங்கள - முஸ்லிம் மக்களின் உறவுகளை மேம்படுத்த வேண்டுமாயின் ஹலால் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் ஹராம் முறை நிறுத்தப்பட வேண்டும். சத்தமிட்டு, சண்டையிட்டு இதனை நிறுத்த முடியாது. பௌத்த மதம் மாத்திரமே உலகில் உள்ள சுதந்திரமான மதமாகும். முஸ்லிம் அமைச்சர்களுக்கு ஹலால் தேவையொன்றால் அவர்களை அதனை பயன்படுத்தி கொள்ளட்டும். எமக்கு ஹலாலை நிராகரிக்க உரிமை உள்ளது.

மத்திய கிழக்கு நாடுகள் பௌத்தம் உள்ளிட்ட ஏனைய மதங்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துகின்றன. ரிஷானாவுக்கு ஏற்பட்ட கொடுமையின் போது பௌத்த ஆலயங்களில் வழிப்பாடுகள் நடத்தப்பட்டன. மதங்கள் ஐக்கியத்திற்கு குந்தகம் விளைவிப்பதில்லை. எனினும் நாங்கள் இவ்வாறான அடிப்படைவாதத்தை நிராகரிக்கின்றோம்.

எம்மீது பலவகையில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. எமக்கு ஊடகங்கள் இல்லை. இவ்வாறான சந்தர்ப்பங்களில் சண்டை கலைகள் தேவைப்படுகின்றன.  சண்டை கலைகள் முதலில் பௌத்த ஆலயங்களிலேயே ஆரம்பிக்கப்பட்டன. நமது பாதுகாப்புக்காக இதனை பயன்படுத்தி கொள்வோம். இவ்வாறான சந்தர்ப்பங்களில் திட்டி சண்டை போடுவதன் மூலம் பயனில்லை.  இதற்கு இடமளிக்கவும் கூடாது. ஹலால் என்ற கெடுதிக்கு இடம் கொடுக்காது முஸ்லிம்கள் புனித குர்- ஆனின் அடிப்படையில் செயற்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றோம் எனவும் ஓமல்பே சோபித தேரர் கூறியுள்ளார்

No comments:

Post a Comment