எகிப்துக்கு விஜயம் மேற்கொண்ட ஈரான் ஜனாதிபதி மஹ்மூத் அஹமதினஜாத் காசாவுக்கு செல்ல ஆர்வமாக உள்ளதாக கூறியுள்ளார்.
அல் மாயாதீன் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அஹமதினஜாத் கூறியதாவது:- “அவர்கள் அனுமதி அளித்தால் காசா சென்று அங்குள்ள மக்களை பார்வையிட ஆர்வமாக உள்ளேன்” என்றார்.
எனினும் யாருடைய அமைதியை பெறவேண்டும் என்பது குறித்து அவர் எதுவும் கூறவில்லை. எகிப்தின் ரபா வாயிலூடாகவே காசாவுக்குப் பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.”
“எல்லாவற்றுக்கும் மேலாக ஜெரூசலம் முழுமையாக விடுதலை பெற்ற பின் அங்கு தொழ வேண்டும் என்பதே எனது கனவு” என்றார். ஈரான் இஸ்ரேல் என்ற நாட்டை அங்கீகரிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment