Monday, February 18

முஸ்லிம்களுக்கு ஏற்படும் ஆபத்துக்களுக்கு அரசாங்கமே பொறுப்பு : முஜுபுர் ரஹ்மான்





இலங்கையில் மீண்டும் இனக்கலவரத்தை தூண்டிவிட அரசாங்கம் முயற்சிக் கின்றது. இதனால் முஸ்லிம்களுக்கு ஏற்படும் ஆபத்துக்களுக்கு அரசாங்கமும் பொதுபலசேனா அமைப்புமே பொறுப்புக்கூற வேண்டுமென்று ஐக்கிய தேசியக் கட்சியின் மேல்மாகாண சபை உறுப்பினர் முஜுபுர் ரஹ்மான் தெரி வித்தார்.
இது குறித்து அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
பொது பலசேனா நேற்று ஞாயிற்றுக்கிழமை மஹரகமவில் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தி ஹலால் சான்றிதழை இல்லாதொழிக்க ஒரு மாதகால அவகாசம் வழங்கியுள்ளது. அதேபோன்று குருநாகல் உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் முஸ்லிம் வியாபார நிலையங்கள் தாக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் எவ்விதமான பொறுப்பும் கூறாமல் மெளனம் சாதிக்கின்றது.
எனவே, இன்று நாட்டில் முஸ்லிம்களின் உயிர்களுக்கு ஆபத்தான சூழலே ஏற்பட்டுள்ளது. இதற்கு அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும். இலங்கையை இந்தியாவிற்கு விற்றாலும் பறவாயில்லை. ஜாதிக ஹெல உறுமயவிற்கு ஹலால்தான் பிரச்சினையாகும். எனவே, திட்டமிட்ட முறுகலை ஏற்படுத்த பல சக்திகள் முயற்சிக்கின்றன. இதன் பின்னணியில் அரசாங்கமே உள்ளது. ஆளும் தரப்பின் முஸ்லிம் அமைச்சர்கள் மெளனமாக உள்ளமை மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது எனக் கூறினார்.

No comments:

Post a Comment