Monday, February 18

வீழ்ச்சி காணும் அமெரிக்க டொலரின் ஆதிக்கம்!

வீழ்ச்சி காணும் அமெரிக்க டொலரின் ஆதிக்கம்!



உலகத்தின் நாணயம் வழங்கும் தொகையில் அமெரிக்க நாணயத்தின் அளவு தொடர்ச்சியான வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. இன்று உலகின் நாணயச் சந்தையில் ஆறு ரில்லியன் டொலர்கள் பெறுமதியான பணத்தொகை புழக்கத்திலுள்ளது.

அதன் 62 வீதத்தை இன்றும் அமெரிக்க டொலர்களே ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. அமெரிக்க டொலர்களின் தொலை 3.2 ரில்லியன் ஆகும். இருந்த போதும் அமரிக்க டொலர் பதினைந்து வருட தொடர் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. 
  

ஜப்பானிய யென், சீன யுவான், சுவிஸ் பிராங் ஆகிய நாணயங்கள் சந்தையை ஆக்கிரமித்து வரும் அதேவேளை வேறு நாணயங்களும் சந்தையில் அமரிக்க நாணயத்தை நிரப்பி வருவதாக ஐ.எம்.எப் தெரிவிக்கின்றது. அமெரிக்க மக்களின் பெரும்பன்மையினர் நம்பவில்லை என்றாலும் டொலர் உலகத்திலிருந்து அகற்றப்படும் நிலை உருவாகி வருவதை நிறுத்த முடியாது என்று அமெரிக்க சந்தை ஆய்வாளர் டிக் போவி தெரிவித்துள்ளார். 

ஒவ்வொரு வருடமும் ஒரு ரில்லியன் டொலருக்கு மேல் அதிகரிக்கும் கடன் நாடான அமெரிக்காவின் நாணயம் இன்னும் உலக நாணயமாக இருக்க வாய்ப்பில்லை என்று அவர் மேலும் குறிப்பிடுகிறார். கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் பெரி எச்சன்கிரீன் கூறுகையில் டொலர் இன்று பாதுகாப்பான நாணயமாக முதலீட்டாளர்கள் கருதவில்லை என்கிறார். 

பெரும்பாலான பொருளியல் ஆய்வாளர்களின் கருத்துப்படி 2015, 2016 ஆம் ஆண்டுகளில் டொலரின் ஆதிக்கம் முற்றாக வீழ்ச்சியடைய ஆரம்பிக்கும் என்கிறார். 

No comments:

Post a Comment