Thursday, February 21

இது கொள்கை அடிப்படையிலான தீர்மானமே, நடைமுறை வடிவத்தை பின்னர் அறிவிப்போம் – ஜம்இய்யதுல் உலமா

Murshid-Moulaviமுஸ்லிம்களுக்கு மட்டுமே ஹலால் என்ற விடயம் கொள்கை அடிப்படையிலான தீர்மானமாகும். இதன் நடைமுறை வடிவம் குறித்து பின்னர் அறிவிப்போம் என ஹலால் பிரிவின் அஷ்ஷெய்க் முர்ஷித் முழப்பர் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது கூறினார்.

ஒரே கம்பனி முஸ்லிம்களுக்கென ஹலால் உற்பத்திகளையும், முஸ்லிம் அல்லாதோருக்கு ஹலால் சின்னம் பொறிக்காத உற்பத்திகளையும் தயாரிக்கும். ஹலால் உற்பத்திகளை நாம் முறையாக கண்காணிப்போம். இதில் சில நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படலாம். அவை குறித்த முறையையும் விளக்கத்தையும் பின்னர் அறிவிப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.
அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவுடன் கலந்தாலோசித்ததன் பின்னரே, இது குறித்த தெளிவுகளை வழங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
ஜம்இய்யதுல் உலமா ஹலால் பிரிவு தொடர்ந்தும் இயங்கும் எனவும் அங்கு தெளிவு படுத்தப்பட்டது.

No comments:

Post a Comment