ஹலாலில் எந்தவித பிரச்சினையும் கிடையாது. மதவாதத்தைத் தூண்டி இலாபம் பெற
நினைக்கும் ஒரு குழுவினரே ஹலாலை பிரச்சினைக்குரிய ஒன்றாக
மாற்றியிருக்கிறார்கள். சர்வதேச நாடுகளில் எல்லாம் ஏற்றுக் கொள்ளப்பட்ட
ஹலால் சான்றிதழ் இங்குள்ளவர்களுக்கு மாத்திரம் பிரச்சினையாகத் தெரிவதில்
நியாயமில்லை என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்து
கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சர்வதேச சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படும் குறிப்பிடத்தக்க
உற்பத்திகளுக்கு ஹலால் சான்றிதழ் கண்டிப்பாக அவசியமாகும். ஹலால் சான்றிதழ்
இன்றி சில உற்பத்திகளை அங்கு அனுப்ப முடியாது. அவ்வாறிருக்கையில்
இலங்கையில் மாத்திரம் ஹலால் சான்றிதழ் இன்றி பொருட்களை சந்தைப்படுத்துவது
அவசியமற்ற ஒன்றாகும்.
10 வீதமான முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் என்பதற்காக 10 வீதமான
உற்பத்திகளுக்கு மாத்திரம் ஹலால் சான்றிதழ் வழங்க முடியாது. இது தேவையற்ற
ஒரு நடைமுறை எனவும் அமைச்சர் இங்கு மேலும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment