முஸ்லிம்களுக்கு
மட்டுமே ஹலால் என்ற தீர்மானத்தை ஜம்இய்யதுல் உலமா எடுப்பதற்கு, பாதுகாப்பு
அமைச்சின் அழுத்தங்கள் ஏதும் இருந்தனவா என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி
எழுப்பினார்.
”நாங்கள் சுதந்திரமான ஒரு அமைப்பு. எம்மை யாரும் நிர்ப்பந்திக்கவில்லை.
நாட்டின் சகவாழ்வை, தவறான புரிந்துணர்வுகள் பாதித்து விடக்கூடாது என்ற
தூரநோக்கின் காரணமாகவே நாம் இந்த நிலைப்பாட்டை எடுத்தோம்” என ஜம்இய்யதுல்
உலமா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
முஸ்லிம்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறதா எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
ஆங்காங்கு பதட்ட நிலைகள் உள்ளன. இவற்றை கட்டுப்படுத்துவது அரசினதும்,
பாதுகாப்பு அமைச்சினதும் பொறுப்பாகும். அது குறித்து நாம் அவர்களுடன்
கலந்துரையாடியுள்ளோம் என பதிலளிக்கப்பட்டது.
இந்த செய்தியாளர் மாநாட்டில் ஜம்இய்யாவின் தலைவர் அஷ்ஷெய்க் முப்தி
றிஸ்வி, பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் முபாறக், பொருளாளர் அஷ்ஷெய்க் கலீல்,
ஹலால் பிரிவு செயலாளர் அஷ்ஷெய்க் முர்ஷித் முழப்பர், ஊடகப் பேச்சாளர்
பாஸில் பாரூக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment