Friday, February 15

மங்கள பெளத்தர்களை நிந்தித்துள்ளார்: ஹெலஉறுமய

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர நேற்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பில் வெளியிட்ட கருத்துக்களை தாம் வன்மையாக கண்டிப்பதாக ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க விடுத்துள்ள செய்தியில்,
மங்கள சமரவீர எம்.பி. பெளத்தர்களிடம் மன்னிப்பு கோரவேண்டும். அவ்வாறு மன்னிப்புக் கோரவில்லையாயின் அவர்மீதான அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் சிந்திக்கவேண்டி ஏற்படும்.
பொதுபலசேனா,மற்றும் முஸ்லிம் தரப்புடன் கடந்த வாரம் அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில்   சந்திப்பொன்றினை நடத்தி இருந்தார்.

அப்படியானால் மங்கள சமரவீர நேற்று வெளியிட்டது பொதுபலசேனா தொடர்பிலான அக்கட்சியின் நிலைப்பாடா?
கட்சியின் முக்கிய பொறுப்புவாய்ந்த ஒருவர் தனிப்பட்ட ரீதியில் கருத்து வெளியிட முடியாது என ரணில் அண்மையில் தெரிவித்திருந்தார். அப்படியானால் ஐ.தே.கா.வின் கொள்கைகளை மீறி மங்கள கருத்து வெளியிட்டுள்ளாரா? என்பதை தெளிவு படுத்தவேண்டும்.
பொதுபலசேனா தொடர்பில் மங்கள சமரவீர நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் பொது வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் அக்கட்சி நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அவர் பொதுபலசேனாவையும் பெளத்த தேரர்களையும் பெளத்தர்களையும் நிந்திக்கும் வகையிலேயே கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.அவர் பெளத்தர்களிடம் மன்னிப்பு கோரவேண்டும். ஐ.தே.கா. அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என தெரிவித்தார்.
முன்னதாக  நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் பொதுபலசேனா  அமைப்பை மங்கள சமரவீர 'தலிபான் நிகாய' என வர்நித்திருந்தமைக்குரிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment