Friday, February 15

இலங்கையில் தற்கொலை செய்து கொள்வோர் தொகையில் குறைவு

இலங்கையில் தற்கொலை செய்து கொள்வோர் தொகையில் குறைவு



2011ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2012ஆம் ஆண்டில் தற்கொலை சம்பவங்கள் குறைவடைந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

2011ஆம் ஆண்டு 3,871 பேர் தற்கொலை செய்து கொண்டதாகவும் 2012இல் 2,704 பேர் மட்டுமே தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

2011இல் 2,939 ஆண்களும் 832 பெண்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

2012இல் 292 ஆண்களும் 612 பெண்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதில் நஞ்சருந்தி மற்றும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவர்களே அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலேயே அதிகளவானோர் தற்கொலை செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment