முஸ்லிம்களுக்கு
எதிராக நாட்டில் நடக்கும் வன்முறைகள் தொடர்பில் அரசு பராமுகமாக இருப்பதாக
எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்ரமசிங்க முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள்
வேடிக்கையாக உள்ளதாக மேல்மாகாண ஆளுநர் அலவி மெளலானா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அறிக்கையொன்றினை அனுப்பி வைத்துள்ள அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள்
தொடர்பில் அரசு பராமுகமாக இருப்பதாக ரணில் தெரிவிக்கும் குற்றச்சாட்டுக்கள்
நகைப்புக்கு இடமானது என்பதற்கு வரலாறு சான்றாகும்.
2001 இல்
ரணில் அரசு, புலிகள் , நோர்வே ஆகியவற்றின் கூட்டு ஒப்பந்த காலத்தினை
முஸ்லிம்கள் மட்டுமன்றி யாரும் மறக்கவில்லை. அன்று முஸ்லிம் சமூகம் மோசமாக
பாதிக்கப்பட்டது. நாட்டின் பல பகுதிகளில் சிங்கள வீரவிதான
பயங்கரவாதத்திற்கான எதிர்ப்பு இயக்கம் போன்றவற்றால் முஸ்லிம் சமூகம் மிக
மோசமான அச்சுறுத்தல்களை சந்திக்க நேர்ந்தது.
அப்போது ரணில் கூறும் அமைதி அரசின்
ஆட்சியின் போது முஸ்லிம்கள் ஆண்,பெண் சிறுவர் என்ற வேறுபாடின்றி
கொல்லப்பட்டனர். தொழிலுக்காக சென்ற முஸ்லிம்கள் கொல்லப்பட்டு உறவினர்கள்
கண்ணெதிரே எரித்து கொல்லப்பட்டனர்.
தற்போது முஸ்லிம்களுக்கு எதிராக எழும்
இனவாத ஒடுக்கு முறையினை அடக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகள்
இடம்பெற்றுவருகின்றன.
பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்ற வகையில்
நாட்டின் இன ஐக்கியம் பேணப்படும் வகையில் விடயங்களை அணுகாமல் அரசியல்
இலாபம் தேடுவது நாட்டை அழிவின்பால் இட்டுச்செல்லும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது. (Vidivelli)
No comments:
Post a Comment