Friday, February 8

அமைச்சர் பஷீரின் நாடகத்தால் புலம்பித் திரியும் முஸ்லிம் காங்கிரஸ் – முபாறக் அப்துல் மஜீத்

MubarakAMajeedபஷீர் சேகு தாவூத் இவ்வாறுதான் செய்வார் என நாம் அப்போதே கூறியும் கேட்காத சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் இப்போது ஒப்பாரி வைப்பதும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறுவதும் தங்களை தாங்களே முட்டாள்கள் என பறைசாட்டுவதையே காட்டுகிறது என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவித்ததாவது,

கடந்த கிழக்கு மாகாண சபை தோ்தலின் போது முஸ்லிம் காங்கிரசின் தவிசாளர் பஷீர் சேகு தாவூத் தனது அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்த போது இது முஸ்லிம் மக்களை ஏமாற்றுவதற்கான முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்களின் வழமையான நடவடிக்கை என்றும், தோ்தலின் பின் இதை விட அந்தஸ்த்துள்ள அமைச்சுப் பதவியை பெறுவார் எனவும் நாம் மட்டுமே பகிரங்கமாக கூறினோம். இதனை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் ஏற்றுக்கொள்ளாமல் இத்தகைய ஏமாற்றக்கு பலியாகி அக்கட்சிக்கு வாக்களித்தனர்.
தற்போது நாம் கூறியது போல் பஷீர் சேகு தாவூத் அமைச்சரவை அமைச்சராக ஆகியுள்ளார். இதனை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் தமது அரசியல் மடமை காரணமாக எதிர் பாராத போதும் நாம் எதிர் பார்த்தது நடந்துள்ளது.
இந்த அதிர்ச்சியை தாங்க முடியாத மு.கா உறுப்பினர்கள் தற்போது புலம்பித்திரிவதையும் பஷீருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பேசுகிறார்கள்.
எம்மைப்பொறுத்த வரை அரசும், மு.கா தலைவர் ஹக்கீமும் பஷீரும் சோ்ந்து நடத்திய நாடகமே இந்த ராஜினாமாவும், தற்போதைய உயர் அமைச்சர் பதவியுமாகும்.
கடந்த மாகாண சபை தோ்தலில் முஸ்லிம்களில் 80 வீதமானோர் ஐ.தே.கட்சிக்கே வாக்களிக்கும் நிலை இருந்ததை கண்ட இவர்கள் அந்த வாக்குகளை திசை திருப்புவதற்கே இந்த நாடகத்தை நடத்தினார்கள்.
இது புரியாமல் அவர்களுக்குப் பின்னால் சென்று மீண்டும் மீண்டும் முட்டாள்களாவதையே தொழிலாகக்கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் இப்போது புலம்பத் தொடங்கினார்கள். இந்தப்புலம்பல் இன்னும் சில மாதங்களில் முடிவுற்று அடுத்த தோ்தலின் பின் மீண்டும் தொடரும்.
பொதுவாக அமைச்சர்கள் தலைமையிலான முஸ்லிம் கட்சிகளை நிராகரித்து பதவிக்கு ஆசைப்படாத, சுயநலமற்ற கட்சியின் பால் முஸ்லிம் மக்கள் ஒற்றமைப்படாத வரை இவ்வாறான நாடகங்கள் தொலைக்காட்சி தொடர் நாடகங்கள் போல் தொடரத்தான் செய்யும். ஒப்பாரிகளும் தொடரத்தான் செய்யும் என்பதை அழுத்தமாக கூறி வைக்கின்றோம்.

No comments:

Post a Comment