Friday, February 8

வளைகுடாவில் இருந்து ஐரோப்பாவிற்கு ரெயில்கள்! 2018-ல் ஓடத் துவங்கும்!

Railway system to link Gulf with Europe by 2018வளைகுடா நாடுகளை இணைக்கும் ஜி.சி.சி ரெயில்வே பணி பூர்த்தியானால் ஜோர்டான் வழியாக ஐரோப்பாவிற்கும் ரெயில் பாதை நீட்டிக்கப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சவூதியில் இருந்து ஜோர்டான், துருக்கி வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் ரெயில் பாதை அமைக்கப்படும். இது 2018-ஆம் ஆண்டு பூர்த்தியாகும் என்று நம்புவதாக நிறுவனத்தின் சி.இ.ஒ ஸாத் அல் முஹன்னதி தெரிவித்துள்ளார்.
ஜோர்டான் வரையிலான சவூதி ரெயில்வே பாதையின் பணிகள் நடந்துக் கொண்டிருக்கின்றன. ஐரோப்பாவிற்கான பாதை பூர்த்தியானால் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தில் பெரும் முன்னேற்றம் ஏற்படும்.

அல் அகபா துறைமுகத்தில் இருந்து சிரியா வரை 509 கி.மீ நீளத்தில் ஜோர்டான் பாதை நிர்மாணிக்கப்படுகிறது. இவ்வாண்டு பணி துவங்கும் ரெயில்வே பாதையின் வேலைகள் 2017 ஆம் ஆண்டு பூர்த்தியாகும். இது தவிர ஈரான், ஈராக்கை ஒன்றிணைத்து சிரியாவுடன் இணைக்கும் சிறப்பு பாதையை நிர்மாணிக்கும் திட்டமும் தயாராக உள்ளது.
அதேவேளையில், அடுத்த ஆண்டு ஜி.சி.சி ரெயில்வே ஆணையம் உருவாக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஒரு வளைகுடா நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு செல்லும் இந்தியர் உள்ளிட்ட வெளிநாட்டினருக்கு பயணிக்க ஒருங்கிணைந்த கஸ்டம்ஸ், எமிக்ரேசன் சட்டங்கள் அமல்படுத்த வேண்டும். ஜி.சி.சி நாடுகளில் உள்ள குடிமக்களைப் போலவே வெளிநாட்டினருக்கும் ஜி.சி.சி ரெயில்வேயில் பயணிக்க வசதிகளை ஏற்பாடுச்செய்ய ஆணையம் உருவாக்கப்படுகிறது என்று ஜி.சி.சியின் உலக வங்கி ஆலோசகர் ரமீஸ் அல் அஸ்ஸர் கூறினார்.
சவூதி அரேபியாவுக்கும், பஹ்ரைனுக்கும் இடையே ரெயில்வே பாதைக்காக 4.5 பில்லியன் டாலரின் கோஸ்வே கட்ட ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது என்று ரமீஸ் தெரிவித்தார். ஒரு ஆண்டு ஆய்வு நடத்திய
பிறகு ஆணையம் உருவாக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment