Friday, February 8

எமது இணக்கத்துடனேயே பதில் தயாரிக்கப்பட்டது: அமைச்சர் ஹக்கீம்

முஸ்­லிம்­க­ளுக்கும் இஸ்­லாத்­துக்கும் எதி­ரான வன்­மு­றைகள் மற்றும் நட­வ­டிக்­கைகள் தொடர்­பான அர­சாங்­கத்தின் பதி­லா­னது தமது இணக்­கத்­து­ட­னேயே தயா­ரிக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்று சபையில் தெரி­வித்தார்.
பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை அமர்வின் போது முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றைகள் தொடர்பில் எதிர்க்­கட்சித் தலை­வ­ரினால் முன் வைக்­கப்­பட்ட விஷேட கூற்­றுக்கு அர­சாங்கம் பதி­ல­ளித்­ததன் பின்  சபையில் ஏற்­பட்ட வாய்த்தர்க்கத்தின் போது ஒழுங்குப் பிரச்­சினை ஒன்றை எழுப்­பியே  அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேற்­கண்­ட­வாறு கூறினார்.
அவர் மேலும் கூறு­கையில்;
முஸ்­லிம்­க­ளுக்கும் இஸ்­லாத்­துக்கும் எதி­ரான வன்­மு­றைகள் தொடர்பில் எதிர்க்­கட்சித் தலைவர் இந்த சபையில் விஷேட  கூற்­றினை  முன் வைத்த போது அதனை நான் மிகவும் அமை­தி­யாக இருந்து செவி­ம­டுத்தேன்.
அதே­போன்று எதிர்க்­கட்சித் தலை­வரின் குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு இன்று சபை முதல்வர் பதி­ல­ளித்த போதும் அமை­தி­யாகக் கேட்டுக் கொண்­டி­ருந்தேன்.
சபை முதல்­வரால் வழங்­கப்­பட்ட பதில் அறிக்­கை­யா­னது எமது இணக்­கப்­பாட்­டு­ட­னேயே  தயா­ரிக்­கப்­பட்­ட­தாகும். இதில் எமது கருத்­துக்கள்  உள் வாங்­கப்­பட்­டுள்­ளன.
இவ்­வி­ட­யத்தில் ஒரு­வ­ருக்­கொ­ருவர் குற் றம் சாட்டிக் கொண்டிருப்பதை விடுத்து இரு தரப்பினரும் இணைந்து பிரச்சினைக்கு தீர்வு காண்பதே சிறந்ததாகும் என்றார்.

No comments:

Post a Comment